" alt="" aria-hidden="true" />
அரூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காவல்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் தன்னார்வலர்கள்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அரூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரூர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஊழியர்கள், அரூர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அரூர் காவல் நிலைய காவல் துறையினர், அரூர் மகளிர் காவல் நிலைய காவல் துறை, போக்குவரத்து காவலர்கள் ஆகியோருக்கும் அரூர் நகரில் இருக்கும் மன வளர்ச்சி குன்றிய ஆதரவற்றோருக்கு என தோராயமாக மொத்தம் 250 பேருக்கு 21 நாட்களுக்கு மதிய உணவு அழகு அரூர் அறக்கட்டளை மூலம் வழங்க உரிய அதிகாரிகள் அனுமதியுடனும், போதிய பாதுகாப்புடனும் தற்போது உணவு மற்றும் முகக் கவசங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்